For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் மாயமான விமானம் கண்டெடுப்பு... 10 பேர் உயிரிழந்த சோகம்!

02:06 PM Feb 08, 2025 IST | Web Editor
அமெரிக்காவில் மாயமான விமானம் கண்டெடுப்பு    10 பேர் உயிரிழந்த சோகம்
Advertisement

அமெரிக்காவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று முத்தினம் மதியம் 2.37 மணியளவில் ‘செஸ்னா 208பி கிரான்ட் காராவன்’ எனும் சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் அலஸ்காவின் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Advertisement

விமானம் வெள்ளை மலை பகுதியில் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வந்தது. மேலும், கடல் பகுதிகளிலும் விமானத்தை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவு காரணமாக விமானத்தை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மாயமான விமானத்தில் இருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்தனர். அங்கு மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் தேடிக்கொண்டிருந்தனர். அப்போது அலாஸ்கா கடல் பனியில் விழுந்து விமானம் நொறுங்கி கிடந்ததை மீட்பு படையினர் கண்டனர். உடனடியாக அவர்கள் விமானத்தில் பயணித்தவர்களின் நிலை குறித்து ஆராய்ந்தர். அப்போது விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடந்த 2 விமான விபத்துக்களில் 69 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement