உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன செல்ஃபோன் கோபுரம்!
உத்தரப்பிரதேசத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள செல்ஃபோன் கோபுரம் காணாமல் போயிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கௌஷம்பி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 50 மீட்டர் உயரம் கொண்ட 10 டன் எடையுள்ள செல்ஃபோன் கோபுரம் காணவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!
வெறும் செல்போன் கோபுரம் மட்டுமல்லாமல், தொழில்நுட்பக் கருவிகள், அதற்கான அமைப்பு என ரூ.8.5 லட்சம் மதிப்பிலான அனைத்தும் திருடுப்போயிருப்பதாக தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை
நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள். அந்த செல்போன் கோபுரம் கடந்த ஜனவரி மாதம்தான் பொறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மார்ச் மாதம் ஆய்வு செய்யச் சென்றபோதே அங்கு அந்த கோபுரம் காணவில்லை என கூறப்படுகிறது. அமைக்கப்பட்டிருந்ததாற்கான தடயமே இல்லாமல் திருடர்கள் முழுமையாக அதனை கோபுரம் அகற்றியிருக்கிறார்கள். அது குறித்து நிறுவனத்துக்குத் தெரிவித்து பிறகு காவல்துறைக்குப் புகார் தெரிவித்துள்ளனர்.