‘மிக்ஜாம்’ புயல் - எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
04:38 PM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Advertisement
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜாம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 290 கிலோமீட்டர் தொலைவில் தற்போது நிலை கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்: புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு இது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை அடையும் என்றும், அதன் பிறகு அது வடக்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை அடைந்து வருகிற டிசம்பர் 5-ம் தேதி முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே தீவிர புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.