Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மிக்ஜாம்’ புயல் - நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

10:29 AM Dec 03, 2023 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, 'மிக்ஜம்' புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.

பின்னர் இது, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை வரும் 5-ம் தேதி கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கம் தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று காலையில் ஏற்றப்பட்டது.

Tags :
Andhra PradeshChennaiCycloneCyclone MichaungHeavy rainfallIndiakaraikalMichaungNagarcoilNews7Tamilnews7TamilUpdatesTamilNaduTuticorinweather forecast
Advertisement
Next Article