Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம்!

திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்.
02:16 PM May 18, 2025 IST | Web Editor
திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்.
Advertisement

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் திமுகவின் 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆவது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு இவர் பொறுப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி கிழக்கு , திருப்பூர் வடக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
District InchargeDMKMinisterMRK Panneerselvam
Advertisement
Next Article