For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!

சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
10:21 PM Feb 07, 2025 IST | Web Editor
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு   அமைச்சர் மு பெ சாமிநாதன் வழங்கினார்
Advertisement

தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தாருக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, அடையாறு ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில், உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2023ம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கு சான்றிதல்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் 2023-ஆம் ஆண்டில் வெளயான சிறந்த நூலுக்கு பரிசுத் தொகை நடைபெற்றது.

Advertisement

அதன்படி,  மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில் வேலுநாச்சியார் காவியம் எனும் நூலை எழுதிய புதுகை வெற்றிவேலனுக்கும் பதிப்பித்த அருண் பதிப்பகத்தாருக்கும், புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் இதயக்கணல் ஈன்ற குழந்தை எனும் நூலை எழுதிய என்.எஸ்.கலைவரதனுக்கும் பதிப்பித்த செல்வகமலம் பதிப்பகத்தாருக்கும், புதினம் எனும் வகைப்பாட்டில் அடையாற்றுக்கரை எனும் நூலை எழுதிய மு.து.பிரபாகரனுக்கும் பதிப்பித்த டிஸ்கவரி பதிப்பகத்தாருக்கும், சிறுகதை எனும் வகைப்பாட்டில் தாமரையும் அருக்காணியும் எனும் நூலை எழுதிய சந்துரு மாணிக்கவாசகத்துக்கும் பதிப்பித்த தமிழ் வெளி பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

மேலும், நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் அர்ஜுனன் மகன் அரவான்களப்பலி எனும் நூலை எழுதிய கா. பாலகங்காதரனுக்கும் பதிப்பித்த டி.கே பதிப்பகத்தாருக்கும், சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் முத்தமிழறிஞரின் முத்து மொழிக்கதைகள் எனும் நூலை எழுதிய செல்வி ஹரிவர்ஷ்னி ராஜேசுக்கும் பதிப்பித்த மகேஸ்வரி பதிப்பகத்தாருக்கும், திறனாய்வு எனும் வகைப்பாட்டில் வாசகநோக்கில் நம்கால மகாகவி எனும் நூலை எழுதிய தி.அமிர்தகணேசனுக்கும் பதிப்பித்த ஒரு துளிக் கவிதை பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

அதனுடன், மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி இலக்கணம் எனும் வகைப்பாட்டில் மரபுக்கவிதை எழுதலாம் எனும் நூலை எழுதிய முனைவர் சொற்கோ கருணாநிதிக்கும் பதிப்பித்த ராஜா பதிப்பகத்தாருக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் மு.கருணாநிதி வரலாறு எனும் நூலை எழுதிய தசந்தியா நடராஜனுக்கும் பதிப்பித்த வஉசி பதிப்பகத்தாருக்கும், நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் இனக்குழுச் சமூகமும் இசையும் எனும் நூலை எழுதிய வே.கண்ணதாசனுக்கும் பதிப்பித்த பரிசல் பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அதனுடன், அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம் எனும் நூலை எழுதிய  சு. சிவாவுக்கும் பதிப்பித்த வாலச்சுவடு பதிப்பகத்தாருக்கும், பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் மனம் மறக்கா அமெரிக்கா எனும் நூலை எழுதிய பேராசிரியர் முனைவர் ஹாஜாகனிக்கும் பதிப்பித்த நன்னூல் பதிப்பகத்தாருக்கும், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் தமிழ்ச் சமயசான்றோர் தணிகைமணி வ.சு.செங்கல்வராயபிள்ளை எனும் நூலை எழுதிய பா. எழில் செல்வனுக்கும் பதிப்பித்த சிவாலயம் பதிப்பகத்தாருக்கும், நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் சோழர்கள் இன்று எனும் நூலை எழுதிய சமசுக்கும் பதிப்பித்த தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் தமிழர் காலக் கணிதம் எனும் நூலை எழுதிய பெகணேசனுக்கும் பதிப்பித்த பொதிகை மைந்தன் பதிப்பகத்தாருக்கும், பொறியியல், தொழில் நுட்பவியல் எனும் வகைப்பாட்டில் சொல்லித் தெரிவதில்லை கட்டிடக்கலை எனும் நூலை எழுதிய இ. உதயகுமாருக்கும் பதிப்பித்த பிராம்ப்ட் பதிப்பகத்தாருக்கும், மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் எனும் வகைப்பாட்டில் ஜங்களதுமலை வாழ்வும் வரலாறும் எனும் நூலை எழுதிய ஜெய்சங்கருக்கும் பதிப்பித்த வசந்தவேல் பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் பிரிவினையின் பெருத்துயரம் எனும் நூலை எழுதிய சு. ராமசாமிக்கும் பதிப்பித்த சுவாசம் பதிப்பகத்தாருக்கும், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் இந்தியப் பொருளாதாரம் அம்பேத்கரியப் பார்வை எனும் நூலை எழுதிய மு. நீலகண்டனுக்கும் பதிப்பித்த புரட்சி பாரதி பதிப்பகத்தாருக்கும்,  மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் "நமது மூளை நமது எதிர்காலம் எனும் நூலை எழுதிய மு.அ.அலீமுக்கும் பதிப்பித்த எழுத்து பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டன.

தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் நல்வாழ்விற்கு சித்த மருத்துவம் எனும் நூலை எழுதிய மருத்துவர் மானக்சாக்கும் பதிப்பித்த ஸ்ரீசெண்பகா பதிப்பகத்தாருக்கும், சமயம், ஆன்மிகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் கம்பனும் வைணவமும் எனும் நூலை எழுதிய செல்லக்கிருஷ்ணனுக்கும் பதிப்பித்த கபிலன் பதிப்பகத்தாருக்கும், கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பல்வகை நுண்ணறிவுகள் எனும் நூலை எழுதிய ச. வின்சென்டுக்கும் பதிப்பித்த எதிர் வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,  வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் "பாரம்பரிய இயற்கை வேளாண்மை பாகம்-1" எனும் நூலை எழுதிய முனைவர் அருணா தொல்காப்பியனுக்கும் பதிப்பித்த அருணா பதிப்பகத்தாருக்கும், சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் எனும் நூலை எழுதிய சந்துருவுக்கும் பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கணினியியல் எனும் வகைப்பாட்டில் செகம் புகழும் செயற்கை நுண்ணறிவு எனும் நூலை எழுதிய ப. குணசேகரனுக்கும் பதிப்பித்த பண்புப் பதிப்பகத்தாருக்கும், நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் சிலப்பதிகாரம் நாட்டுப்புறவியல் நோக்கு எனும் நூலை எழுதிய பெ. சுப்பிரமணியனுக்கும் பதிப்பித்த காவ்யா பதிப்பகத்தாருக்கும், வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் நிரல்மொழி எனும் நூலை எழுதிய காதம்பரிக்கும் பதிப்பித்த இலக்கியப் படைப்பு குழுமம் பதிப்பகத்தாருக்கும், இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் நலவாழ்வு நம் கைகளில் எனும் நூலை எழுதிய மருத்துவர் அ வேணிக்கும் பதிப்பித்த சிவாவேணி பதிப்பகத்தாருக்கும், பிறசிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் மெய்ப்பாடுகள் (வாழ்வனுபவக் கட்டுரைகள்) எனும் நூலை எழுதிய ரா. திருப்பதி வெங்கடசாமிக்கும் பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தாருக்கும், விளையாட்டு எனும் வகைப்பாட்டில் தமிழ் மண் தந்த விளையாட்டுகள் எனும் நூலை எழுதிய மா.க. சுப்ரமணியனுக்கும் பதிப்பித்த சு. சாந்தி, செந்தில் நாதன் பதிப்பகத்தாருக்கும், மகளிர் இலக்கியம்
எனும் வகைப்பாட்டில் தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் நூலை எழுதிய சுகிதா சாரங்கராஜுக்கும் பதிப்பித்த ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்கும்,  தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் தமிழ் மலையாளப் பண்பாட்டு ஒப்பீடு எனும் நூலை எழுதிய ப. ஜெயகிருஷ்ணனுக்கும் பதிப்பித்த சாரதா பதிப்பகத்தாருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் உயர்த்தப்பட்ட வீதத்தில் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement