குடியரசுத் தலைவருடன் அமைச்சர் #AnbilMahesh சந்திப்பு!
மணப்பாறையில் ஜன. 28 முதல் பிப். 3ம் தேதி வரை பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுப்பதன் நிமித்தமாகவும் மரியாதை நிமித்தமாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். அப்போது பாரத சாரண சாரணியர் இயக்க அதிகாரிகளும் உடனிருந்தனர்.
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி @rashtrapatibhvn அவர்களை இன்று புதுதில்லியில் சந்தித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர்… pic.twitter.com/4I8w0F8Bk5
— Anbil Mahesh (@Anbil_Mahesh) January 22, 2025
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று புதுடெல்லியில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வருகிற ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 வரை நடைபெறவிருக்கும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி குறித்த தகவல்களை தெரிவித்து, தற்போது நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளின் நிலை குறித்தும் எடுத்துரைத்தோம்"
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.