For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#PublicExam | 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

10:12 AM Oct 14, 2024 IST | Web Editor
 publicexam   10  11  12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
Advertisement

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.

Advertisement

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு

அந்த வகையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • 03.03.2025 - மொழிப்பாடம்
  • 06.03.2025 - ஆங்கிலம்-
  • 11.03.2025 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி
  • 14.03.2025 - கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்
  • 18.03.2025 - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
  • 21.03.2025 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
  • 25.03.2025 - இயற்பியல், பொருளாதாரம்

இதையும் படியுங்கள் : Refund பாலிசி முறையை மாற்ற வேண்டும்… பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் – ஓலாவுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

10ம் வகுப்புப் பொதுத் தேர்வு

10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். முன்னதாக, பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி பிப்ரவர் 28ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும்.தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மார்ச் 28ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
  • ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம்
  • ஏப்ரல் 7ம் தேதி கணிதம்
  • ஏப்ரல் 11ம் தேதி அறிவியல்
  • ஏப்ரல் 15ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு

11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளியாகும். முன்னதாக, பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

  • 05.03.2025 - மொழிப்பாடம்

10.03.2025 - ஆங்கிலம்

13.03.2025 - கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்

17.03.2025 - உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

20.03.2025 - இயற்பியல், பொருளாதாரம்

24.03.2025 - கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயலாஜி

27.03.2025 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

தேர்வு முடிவுகள் எப்போது?

  • 10ம் வகுப்பு- மே 19
  • 11ம் வகுப்பு- மே 19
  • 12ம் வகுப்பு- மே 9

தொடர்ந்து பேசி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது :

"பொதுவாக மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மாணவர்கள் பாதிப்படையாதவாறு பொது தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும்"

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

Tags :
Advertisement