For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரையாண்டுத் தேர்வு - பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

02:05 PM Dec 06, 2023 IST | Web Editor
அரையாண்டுத் தேர்வு   பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு
Advertisement

மிக்ஜாம் புயலால் மழைநீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னையை முழுவதுமாக மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது. சென்னையின் முக்கிய சாலைகளிலும் இன்னும் கூட  மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில்,  திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

Advertisement

இந்நிலையில்,  நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி,  கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.  மழை சற்றே ஓய்ந்துள்ள போதும்,  அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில்,  சென்னை மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.  டிசம்பர் 7-ந் தேதி நடைபெறவிருந்த தேர்வு 14-ந் தேதியும், 8-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 20-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  டிசம்பர் 11 முதல் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags :
Advertisement