For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலி - இன்றும்12 ரயில்கள் ரத்து!

08:10 AM Dec 05, 2023 IST | Web Editor
மிக்ஜாம் புயல் எதிரொலி   இன்றும்12 ரயில்கள் ரத்து
Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னையிலிருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

மிக்ஜாம் புயல் சென்னைக்கு 210 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டு ஆந்திராவை நோக்கி 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடப்பதாலும், வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் போக்குவரத்து முற்றிலும் முடகியுள்ளது.

 இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் இன்று கரையை  கடக்கிறது. ஏற்கனவே சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3937 கன அடியாக குறைப்பு!

இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

டிசம்பர் 5 (இன்று) ரத்து செய்யப்பட்ட  ரயில்கள் : 

  • கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(20644)
  • கோயம்புத்தூர்-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12680)
  • கோயம்புத்தூர்- பரௌனி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்(06059)
  • எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ்(22643)
  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் வந்தே பாரத் சிறப்பு ரயில்(06035)
  • சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்(22637)
  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(20643)
  • சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்(12679)
  • சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(12695)
  • சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்(22207)
  • சென்னை சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(12685)
  • சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ்(22153)
Tags :
Advertisement