மிக்ஜாம் புயல் பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
வங்கக் கடல் பகுதியில் கடந்த 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இதையும் படியுங்கள் : கொட்டித் தீர்த்த கனமழை – கடந்த 45 மணிநேரத்தில் சென்னையில் 47 செ.மீ மழை பதிவு!
இதனை தொடர்ந்து, மிக்ஜாம் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதி கனமழை பெய்தது. தற்போது 210 கிமீ தொலைவில் விலகிச் சென்றதால் தற்போது சென்னையில் மழை குறைந்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். மேலும், நிவாரண முகாமில் உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, மழை பாதித்த இடங்கள், நிவாரண பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.