For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MHA | வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858 கோடி பேரிடர் நிதி!

09:11 AM Oct 02, 2024 IST | Web Editor
 mha   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ 5 858 கோடி பேரிடர் நிதி
Advertisement

மாநில பேரிடர் நிவாரண நிதியின் மத்திய பங்கு மற்றும் மத்திய பேரிடர் நிவாரண நிதி முன்தொகை ஆகியவற்றில் இருந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு ரூ.5,858.6 கோடி பேரிடர் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது.

Advertisement

நாட்டில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அசாம், மிசோரம், கேரளா, திரிபுரா, நாகாலாந்து, குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

இதேபோன்று, சமீபத்தில் வெள்ளம் பாதித்த பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் இந்த குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் (என்டிஆர்எப்) இருந்து கூடுதலான நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனை மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று (அக். 1) 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளது. இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.9,044.80 கோடியும், மத்திய நிதியிலிருந்து ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும் அடங்கும். இதில், வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி நிதியை விடுவித்துள்ளது.

அதன்படி, மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடி, அஸ்ஸாமுக்கு ரூ.716 கோடி, பீகாருக்கு ரூ.655.6 கோடி, குஜராத்துக்கு ரூ.600 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடி, தெலங்கானா ரூ.416.8 கோடி, இமாசலுக்கு ரூ.189.2 கோடி, கேரளாவிற்கு ரூ.145.6 கோடி, மணிப்பூருக்கு ரூ.50 கோடி, திரிபுராவுக்கு ரூ.25 கோடி, சிக்கிமுக்கு ரூ.23.6 கோடி, மிஸோரமுக்கு ரூ.21.6 கோடி, நாகாலாந்துக்கு ரூ.19.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வெள்ளம் பாதித்த அனைத்து மாநிலங்களுக்கும் என்.டி.ஆர்.எப். குழுக்கள், ராணுவ பிரிவுகள் மற்றும் விமான படை ஆகியவற்றை மத்திய அரசு அனுப்பி உதவிகளையும் செய்துவருகிறது.

Tags :
Advertisement