Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!

09:51 PM Aug 01, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளது.

Advertisement

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.  இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது.  இதனால், தமிழ்நாட்டின் மேட்டூர் அணையின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து,  அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதையும் படியுங்கள் : வீட்டை அபகரிக்க கொலைமிரட்டல் விடுத்ததாக மதுரை டிஎஸ்பி வினோதினி மீது புகார்! பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

இந்நிலையில், மேட்டூர் அணை 120 அடியை முழு கொள்ளளவாக கொண்டுள்ள நிலையில், தற்போது நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யை எட்டி உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளது.இதனால், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும், நீர்நிலைகள் அருகில் யாரும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
CauveryDeltaFloodAlertMetturMetturDamSalemTamilNadu
Advertisement
Next Article