மெட்ரோ பணிகள் - ஒரு வாரத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
11:00 AM Feb 11, 2024 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
            
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
                 Advertisement 
                
 
            
        இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லவும், ஜெமினி மேமாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் இடது புறம் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம்.
உத்தமர் காந்தி சாலை, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் திருமலை பிள்ளை ரோடு வழியாக ஜெமினி மேம்பாலம் சென்றடையலாம். மற்ற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட வழி பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 Next Article   
         
 
            