For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மெட்ரோ ரயில் பணிகள் – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

08:44 AM Mar 09, 2024 IST | Web Editor
மெட்ரோ ரயில் பணிகள் – சென்னையில் போக்குவரத்து மாற்றம்
Advertisement

மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டுமான பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் 16060 மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில்மார்ச் 09 மற்றும் 10 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு ஹாடோஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் திருப்பி விடப்படும். இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை டாக்டர் எம்ஜிஆர் சாலை (KH Road) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி திருப்பி விடப்படும்.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நந்தனம் வி.என் சாலையில் நடைபெற
உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு நந்தனம் வி.என் சாலையில் பின்வரும்
போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 10 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை
அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

அண்ணாசாலையிலிருந்து வெங்கடநாராயண சாலை வழியாக தி.நகர் நோக்கி செல்லும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் தடை செய்யப்படும். அதற்குப் பதிலாக, அவை இணைப்புச் சாலை மாடல் ஹவுஸ் சாலை சந்திப்பு, தென்மேற்கு போக் சாலை வழியாகத் திரும்பி வெங்கட்நாராயணன் சாலையில் இடதுபுறமாகத் திரும்பி விடப்படும். பர்கிட் ரோடு, தி.நகரில் இருந்து மூப்பரப்பன் தெரு வழியாக வரும் அனைத்து வாகனங்களும், MTC பஸ்கள் உட்பட தென்மேற்கு போக் ரோடு சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி சென்று அண்ணாசாலையை அடையலாம்.

தென்மேற்கு போக் சாலை மற்றும் தெற்கு தண்டபாணி தெருவில் இருந்து வரும்
வாகனங்கள் வெங்கட் நாராயணா சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாறாக, CIT நகர் 4வது மெயின் ரோடு, CIT நகர் 3வது பிரதான சாலை வழியாக
அண்ணாசாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமைந்தக்கரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (LeftTurn) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்கு செல்லலாம். வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஸ்டெர்லிங் சாலை உத்தமர் காந்தி சாலை (NH Road) வழியாகத் திருப்பி விடப்பட்டும்.  மற்ற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட வழி பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement