For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்!

03:25 PM Jan 18, 2024 IST | Web Editor
சென்னையில் மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்
Advertisement

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பூங்காவில் இருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன (Metro Connect) சேவைகள் சென்னை முழுவதும் உள்ள பல IT பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. நகரப் பயணிகளுக்கு அவர்களின் பணியிடத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இணைப்பு வாகன சேவைகளை வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்காவில் பணிபுரிவோரின் போக்குவரத்து நலன் கருதி அவர்களுக்கான மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.

இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இன்று (ஜன. 18) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, Fastrack Cabs நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.அம்பிகாபதி, ஜெயந்த் டெக் பார்க் நிறுவனத்தின் மேலாளர் வி.பாலகிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே தோராயமாக 5 கி.மீ நீளத்திற்கு, சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவை குளிரூட்டப்பட்ட 18 இருக்கைகள் கொண்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் இயக்கப்படும்.

இந்த இணைப்பு வாகன சேவை இயக்கப்படும் நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டதாகும். Fastrack Cabs மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வாகன சேவை தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement