For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘மெதக்குது காலு ரெண்டும்’ - வெளியானது #Brother படத்தின் புதிய பாடல்!

07:19 PM Oct 23, 2024 IST | Web Editor
‘மெதக்குது காலு ரெண்டும்’   வெளியானது  brother படத்தின் புதிய பாடல்
Advertisement

பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “அஜித் மாதிரி வேறு யாரும் வர முடியாது” – மனம் திறந்த #DulquerSalmaan!

அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனிடையே, ‘பிரதர்’ திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
Advertisement