ஊபர் புக் செய்தவருக்கு வந்த மெர்சிடிஸ் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
இந்திய யூடியூர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஊபர் புக் செய்த போது அவருக்கு மெர்சிடிஸ் கார் கிடைத்திருக்கிறது, அதன் புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
யூ டியூப் என்பது வெறும் பொழுதுபோக்குக்கான சமூக வலைதளம் என்பதை தாண்டி பலருக்கு தனி அடையாளத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த இஷான் ஷர்மா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு தனது யூடியூப் சேனலை தொடங்கினார். தான் கற்று கொண்ட விஷயங்கள் மற்றும் தனது பயணம் குறித்து வீடியோக்களை அவர் அதில் பதிவிட்டு வந்தார். இன்ஸ்டியூட் ஒன்றில் படித்து வந்த அவர் கிடைக்கும் நேரத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவர் தனது முதல் வீடியோவை பதிவிட்ட போது அவரின் சக நண்பர்கள் கிண்டல் செய்ததாக சொலலப்படுகிறது.
அவரின் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த உடன் தனது கல்வியை பாதியில் நிறுத்திய அவர் முழு நேரமாக யூடியூபில் கவனம் செலுத்த தொடங்கினார். இதன் மூலம் யூ டியூப் செலிபிரிட்டியாக மாறிய அவர் தற்போது ஒரு மாதத்திற்கு ரூ.35 லட்சம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Booked a regular Uber.
A Mercedes pulls up!
Only in Los Angeles. pic.twitter.com/Qx2ERZQqBW
— Ishan Sharma (@Ishansharma7390) August 10, 2024
இஷான் கிஷன் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர் ஊபரை புக் செய்திருந்தார். அப்போது அவரை அழைக்க மெர்சிடிஸ் கார் வந்திருக்கிறது. மேலும் அந்த காரின் டிரைவர் 4.91 மதிப்பீட்டைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்திருக்கிறார். அந்த காரை புகைப்படம் எடுத்த யூடியூபர் இஷான் கிஷன் இணையத்தில் பகிர்ந்து, "வழக்கமான ஊபரை முன்பதிவு செய்தேன். மெர்சிடிஸ் கார் கிடைத்திருக்கிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டுமே நடக்கும்" என்று பகிர்ந்திருந்தார். இந்த பதிவு இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்தது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் ஊபரை புக் செய்தாலும் ஆரம்பர கார்கள் கிடைக்கும் என இந்திய பயனர்கள் சிலர் பதிலளித்திருந்தனர். மேலும் ஆதித்யா கௌதம் என்ற பயனர் "பெங்களூரில் ஊபர் பிரீமியர் ஒன்றை முன்பதிவு செய்தேன்" என்று, வெள்ளை மாருதி காரின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.