Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Meghalaya இரண்டு MLAக்கள் 6ஆண்டுகளுக்கு பதவி நீக்கம் - காங்கிரஸ் அறிவிப்பு!

03:07 PM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

மேகாலயா மாநிலத்தில் இரண்டு  காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்து அம்மாநில காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேகலாயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி மேகாலயா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவரை 6 ஆண்டுகளுக்கு பதவிநீக்கம் செய்வதாக மேகாலயா காங்கிரஸ் பொதுச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மவாத்தி தொகுதி எம்எல்ஏ சார்லஸ் மார்ங்கர் மற்றும் நாங்ஸ்டாய்ன் தொகுதி எம்எல்ஏ கேப்ரியல் வாலங்க் ஆகிய இருவரும் மறு உத்தரவு வரும் வரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேகாலயா காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

’பிளாக் கமிட்டியின் சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையிலும், மேகாலயா ஜனநாயகக் கூட்டணி அரசுடன் உங்களுக்கு உள்ள தொடர்பின் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது இதுபோன்ற செயல்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை என்பதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சியில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
CongressMeghalayaMLAsuspended
Advertisement
Next Article