For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#MeganSchutt | மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்... சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை!

04:44 PM Oct 09, 2024 IST | Web Editor
 meganschutt   மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள்    சாதனை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை
Advertisement

மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேகன் ஷட் (46 விக்கெட்) படைத்துள்ளார்.

Advertisement

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்.8) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 40 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 88 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த நிலையில், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்களை மேகன் ஷட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, மகளிர் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை மேகன் ஷட் (46 விக்கெட்) படைத்துள்ளார். இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷப்னம் இஸ்மாயில் (43 விக்கெட்), 3ம் இடத்தில் இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் (41 விக்கெட்), 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி (40 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

Tags :
Advertisement