Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும்!” ஓபிஎஸ் பேச்சு!

04:38 PM Feb 10, 2024 IST | Web Editor
Advertisement

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார். 

Advertisement

மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது.  இதனால் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது.  இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ்,  திமுக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய INDIA - கூட்டணியும் கடுமையான போட்டிக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில்,  நாடு முழுவதும் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு,  வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது,  கூட்டணியை இறுதி செய்யாத கட்சிகளுடன் கூட்டணியை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.  அதே போல் தமிழகத்திலும் தேர்தல் காளம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி குறித்து பேசி முடிக்கப்பட்டு உள்ளது.  உங்களிடம் கூறிவிட்டு அறிவிப்போம். பாஜக-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருதற்காக மெகா கூட்டணி அமையும்.

இவ்வாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Tags :
எ=BJPElection2024Lok Sabha Elections 2024Narendra modinews7 tamilNews7 Tamil UpdatesOPSParliament Election 2024PMO IndiaTamilNadu
Advertisement
Next Article