For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மருத்துவ ஆணையம் ‘தன்வந்திரி’ நிலையமாக முடியாது - சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

12:48 PM Dec 01, 2023 IST | Web Editor
மருத்துவ ஆணையம் ‘தன்வந்திரி’ நிலையமாக முடியாது   சு வெங்கடேசன் எம் பி  கண்டனம்
Advertisement

தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commision) சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படமும், பாரதம் என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அதன் விதிகளை மாற்றியது. இந்தப் புதிய மாற்றங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக்களின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்குப் பதிலாக 'பாரதம்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு பல்வேறு வகையில் விமர்சனங்களும், மாறுபட்ட கருத்துகளும், எதிர்ப்புகளும் பரவிவருகின்றன. பலதரப்பட்ட மாணவர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்:

“தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல… மக்களின் உயிரோடு விளையாடுவது.” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல கண்டனக் குரல்கள் எழுந்த காரணத்தினால், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பி.என்.கங்காதர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு - வெள்ளையில் இருந்தது. தற்போது நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டபோது லோகோவில் தன்வந்திரியின் புகைப்படத்தை சின்னத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார். அதேபோல 'பாரதம்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதும் உண்மைதான், அப்படிச் செய்வதற்குப் பின்னால் வேறு எந்தக் காரணமும் இல்லை” என தெரிவித்துள்ளார். 

Tags :
Advertisement