For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென்மாவட்டங்களில் 1,480 மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்!

02:05 PM Dec 21, 2023 IST | Web Editor
தென்மாவட்டங்களில் 1 480 மருத்துவ முகாம்கள்   அமைச்சர் மா  சுப்பிரமணியன்
Advertisement

மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 1480 மருத்துவ முகாம்கள்
நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்
துறை சார்பாக பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் 
நடத்தப்பட்டது.  முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள் :விரைவில் தொடங்குகிறது சர்தார் 2 படப்பிடிப்பு! முதற்கட்ட பணிகள் தீவிரம்!

அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் கண், பல், ரத்தம், இ.சி.ஜி போன்ற பரிசோதனைகளுடன் முழு உடல் பரிசோதனையானது
மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர்கள், பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:

"முதலமைச்சர் அறிவுறுத்தல் படி இந்த பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம்
தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து இந்த மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் போது தங்களின் உயிரையும் துச்சமென மதித்து செய்தியாளர்களும்,
புகைப்படக்காரர்களும் களத்தில் முன் நின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாகவே
இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களின் உடல்நிலையை பேணி பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

மேலும், தென்மாவட்டங்களில் பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் இதுவரை 1480 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

196 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் மருத்துவப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ
உதவியாளர் உள்ளனர்."

இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

Tags :
Advertisement