For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!

05:12 PM Jun 03, 2024 IST | Web Editor
“வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் ”    தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி
Advertisement

வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னை ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 

Advertisement

7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான  வாக்குகள் நாளை என்னப்படுகின்றன.  இந்நிலையில்,சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சத்யபிரத சாகு கூறியதாவது:

ஒவ்வொரு சுற்றுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவித்து கொண்டே இருப்போம். வாக்கு என்னும் மையங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.  வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருவோம்.  வாக்கு என்னும் மையத்திற்குள் செய்தியாளர்களுக்கு கைபேசி எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு தேர்தல் செய்தி தொடர்பாளர்கள் மற்றும் தகவல் அறிவிப்பு பலகையின் மூலம் வாக்கு எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும்.  நாளை காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு என்னும் பணி தொடங்கும்.  EVM இயந்திரம் வாக்கு என்னும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளும் நாளை காலை 8.00 மணிக்கு திறக்கப்படும்.  தபால் வாக்குகள் அதிகமாக உள்ள இடத்தில் மட்டும் EVM இயந்திரம் மூலம் வாக்கு என்னும் பணி 9.00 மணி ஆகும்.

தபால் வாக்குகள் அதிகமாக உள்ள பகுதி 

  • சோழிங்கநல்லூர் - 30 (கவுண்டிங் டேபிள்)
  • கவுண்டம்பாளையம் - 20
  • (கோயம்புத்தூர்) பல்லடம் - 18

தபால் வாக்குகளுக்கு முதல் சுற்று,  இரண்டாம் சுற்று என எதுவும் கிடையாது.  சுற்றும் நேரம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை குறித்து அமையும்.  தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்தவுடன் முடிவுகள் அப்பொழுதே தெரிவிக்கப்படும்.

Tags :
Advertisement