For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்" - நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து!

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
08:01 AM Apr 29, 2025 IST | Web Editor
 இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்    நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து
Advertisement

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.

Advertisement

இதையும் படியுங்கள் : GT vs RR | சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி… ராஜஸ்தான் அதிரடி வெற்றி!

அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜன.25ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று (ஏப்.28) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார். மேலும், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"பத்மபூஷன் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார். திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும்  அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்"

இவ்வாறு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement