Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாக அமையட்டும்" - அண்ணாமலை உகாதி திருநாள் வாழ்த்து!

உகாதி திருநாளை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருநாள் தெரிவித்துள்ளார். 
11:21 AM Mar 30, 2025 IST | Web Editor
உகாதி திருநாளை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருநாள் தெரிவித்துள்ளார். 
Advertisement

யுகாதி என்று அழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு இன்று (மார்ச் 30) கொண்டாடப்படுகிறது. தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இந்த நாளைக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். யுகாதி திருநாளை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழியுடனும், தமிழ் மக்களுடனும் இரண்டறக் கலந்து, நம் மண்ணுக்கும், கலாச்சாரத்துக்கும் பெருமை சேர்த்து, சகோதரத்துவம் பேணும் நம் தெலுங்கு, கன்னட சகோதர சகோதரிகளுக்கு, பாஜக சார்பாக இனிய உகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாகவும், அன்பும், அமைதியும் நிலவுவதாகவும், வசந்த காலத்தின் தொடக்க நாளான இந்த உகாதி நன்னாள் அமையட்டும்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPnews7 tamilNews7 Tamil UpdatesugadiUgadi 2025
Advertisement
Next Article