Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஒவ்வொருவரின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:04 AM Mar 03, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று (மார்ச் 3) தொடங்கி வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 3ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

Advertisement

இதேபோல், புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வினை 86 தனியார் பள்ளியை சேர்ந்த 6 ஆயிரத்து 992 மாணவர்களும், 362 தனி தேர்வர்களும் தேர்வெழுதுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழநாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டுத் தேர்வினை நம்பிக்கையோடு எதிர்கொள்ளக் காத்திருக்கும் உங்கள் ஒவ்வொருவரின் எதிர்காலமும் நிச்சயம் சிறப்பாக அமையும். அதற்கான படிக்கட்டாக இந்தத் தேர்வு அமைந்திருக்கிறது. உங்கள் இத்தனை ஆண்டு கால கனவுக்கும், கடின உழைப்புக்கும் நற்பலன்கள் கொடுப்பதாக இந்தத் தேர்வு அமையட்டும்.

தனித்திறன் படைத்த நீங்கள் ஒவ்வொருவரும், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளை நோக்கிப் பயணப்படவும், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பல சாதனைகள் படைக்கவும், எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :
AnnamalaiBJPBJPLEADERPublicExamPuducherySchoolstudentsTamilNaduWishes
Advertisement
Next Article