டி.என்.பி.எல். கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி!
டி.என்.பி.எல். லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி பெற்றது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் அர்ஜுன் மூர்த்தி 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். வசீம் அகமது 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஆண்டனி தாஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். நிர்மல் குமார் 3 ரன்கள், சரவணகுமார் 1ரன் மட்டும் எடுத்து வெளியேறினர்.சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் இருவரும் சேர்ந்து 56 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில்,20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தனர். கோவை அணி சார்பில் ஷாருக்கான், முகமது ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கினர்.
இதையும் படியுங்கள் : மொஹரம் பண்டிகை : ராணிப்பேட்டை அருகே இஸ்லாமியர்கள் தீயில் இறங்கி நேர்த்திக்கடன்!
முதலில் களமிறங்கிய சுரேஷ் குமார் டக் ஆவுட் ஆனார். சாய் சுதர்சனை 4 ரன்களில் வெளியேறினார். சுஜய், முகிலேஷ் இருவரும் 92 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பின்னர், களமிறங்கிய முகிலேஷ் 63 ரன்கள், சுஜய் 48 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து, கோவை அணி 16.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.