10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டு கொலை
நாட்டில் மவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்று ஜார்க்கண்ட். இன்று ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சரண்டா காடுகளில் மாவோஸ்ட்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஜார்கண்ட் மாநில காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் கொண்ட குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படியினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் மாவேயிஸ்ட்களின் முக்கிய தளபதி அமித் ஹன்ஸ்தா என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் தலைக்கு அரசு 10 இலட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது. தொடர்ந்து அங்கிருந்து மவோயிஸ்ட்களின் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த மாதம், ஆகஸ்ட் 13 ஆம் தேதி, போஸ்டா காட்டில் நடந்த ஒரு மோதலில் மற்றொரு நக்சல் தளபதி அருண் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.