Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைகின்றன... விரைவில் அறிவிப்பு வெளியாகும்” - எடப்பாடி பழனிசாமி!

பல கட்சிகள் இன்னும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். அதுகுறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
02:13 PM May 08, 2025 IST | Web Editor
பல கட்சிகள் இன்னும் கூட்டணியில் இணைய உள்ளார்கள். அதுகுறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

“திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சட்ட, ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. எங்கே பார்த்தாலும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்மாதிரி மாநிலம் என்று சொல்கிறார். நாட்டில் நடைபெறும் பிரச்னை என்னவென்று அறியாமல் இருக்கும் ஒரே முதலைமைசர் ஸ்டாலின்தான்.

தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதனடிப்படையில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். அதோடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான 2ஆம் கட்டப்பணிக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அண்மையில் அறிவித்திருக்கிறார்.

நாங்கள் கொடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை செய்வதிலும், தமிழ்நாடு வளர்வதற்கான அடிப்படைகளை நிறைவேற்றுவதற்கும் எப்பொழுதும் துணை நிற்பேன்.

அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அந்தந்த நேரத்திற்கேற்ப அந்த துறைகளில் கவனம் செலுத்தி மக்கள் பிரச்னையை தீர்த்து வந்தது. ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நடைபெறும் பிரச்னையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை; அவர்கள் முழுக்க முழுக்க வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்திருந்தோம். இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதுகுறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவோம்.” என தெரிவித்தார்.

Tags :
2026 Assembly ElectionADMKALLIANCEedappadi palaniswamiEPS
Advertisement
Next Article