மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி புகழாரம்!
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாட்டின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் 93வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மறைந்த மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். பொதுவாழ்வில் நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவுகொள்வோம்". இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில், "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான அவரது துணிச்சலான முடிவுகள்,
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவரது வரலாற்றுப் பங்களிப்பு ஆகியவை நம்மை தொடர்ந்து வழிநடத்தும். அவரது எளிமை, பணிவு மற்றும் நேர்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒன்றாகும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.