For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ் ரசிகர்களை கவரும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' -வசூல் இத்தனை கோடியா?

01:48 PM Mar 03, 2024 IST | Web Editor
தமிழ் ரசிகர்களை கவரும்  மஞ்சும்மல் பாய்ஸ்   வசூல் இத்தனை கோடியா
Advertisement

'மஞ்சும்மல் பாய்ஸ்’  படத்திற்கு மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement

தென் இந்திய சினிமாக்களில் மலையாள சினிமா ஒரு தனி ரகம் தான். அதிகமான ஆக்ஷன், ஃபேண்டஸி எதுவும் இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒத்திருக்கும் மலையாள சினிமாக் கதைகள் மொழிகளைத் தாண்டியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகிய நிலையில் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஒரே நாளில் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் டப்பிங் இல்லாமல் படம் திரையிடப்பட்டாலும், பல்வேறு திரையரங்குகளில் ஏராளமான காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன. குறிப்பாக படம் வெளியாகி 10வது நாளில் தமிழ்நாட்டில் மட்டும் மூன்றரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement