For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபரிமலை மண்டல பூஜை நிறைவு - 41 நாட்களில் ரூ.241.71கோடி வருவாய்!

08:42 AM Dec 28, 2023 IST | Web Editor
சபரிமலை மண்டல பூஜை நிறைவு   41 நாட்களில் ரூ 241 71கோடி வருவாய்
Advertisement

சபரிமலையில் மண்டல கால பூஜை நடைபெற்ற 41 நாட்களில் ரூ.241.71கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

Advertisement

சபரிமலையில் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து  நேற்று (டிச.27) இரவு நடை அடைக்கப்பட்டது.  கார்த்திகை 1-ம் தேதி தொடங்கிய மண்டல காலத்தின் நிறைவாக நேற்று (டிச.27) காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு,  ஐய்யப்பனுக்கு கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தினர்.

பின்னர் ஐப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடத்தி மண்டல பூஜையை
நிறைவு செய்தனர்.   இதில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 6:30 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.   மேலும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை நிறைவு பெற்று 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி, மூலவரை திருநீறால் மூடி யோக நிலையில் அமர்த்திய பின்னர் நடை அடைக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  டெல்லி தூதரகம் தாக்குதல் எதிரொலி – இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு கட்டுப்பாடு..!

மகர விளக்கு கால பூஜைகளுக்காக டிச.30-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.  டிச-31-ம் தேதி அதிகாலை 3:30 மணி முதல் நெய் அபிஷேகம் நடைபெறும்.   இதனைத் தொடர்ந்து ஜன.15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அன்று முதல் ஜனவரி 20 வரை நடை திறந்திருக்கும்.

பின்னர் ஜன.21-ம் தேதி காலை 7 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை
அடைக்கப்படும்.  இந்த நிலையில் சபரிமலையில் வருமானம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது என தெரிவித்திருந்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு
நேற்று (டிச.27) திடீரென வருமானம் அதிகரித்ததாக தெரிவித்துள்ளது.

குத்தகை ஏல வருமானத்தையும் சேர்த்து இந்த மண்டல காலத்துக்கான மொத்த வருமானம்
241 கோடி 72 லட்சத்து 22 ஆயிரத்து 711 ரூபாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டு 222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 ரூபாயாக இருந்தது.  இதன்படி கடந்த ஆண்டை விட ரூ.18.72 கோடி அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement