Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாஞ்சோலை விவகாரம் - தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் நோட்டீஸ்!

04:04 PM Jul 03, 2024 IST | Web Editor
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே, அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மலை கிராம மக்கள் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று பிபிடிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் மாஞ்சோலை அதனை சுற்றியுள்ளப் பகுதிகளை சேர்ந்த மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தொழிற்சாலையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. மாஞ்சோலை மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் பல அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன.

இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Tags :
chief secretaryManjolaiNCSCnoticeTea EstateTNGovt
Advertisement
Next Article