For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் | #AI மூலம் மறைந்த பாடகரின் குரலை மீண்டும் ஒலிக்க இருப்பதாக தகவல்!

12:33 PM Sep 08, 2024 IST | Web Editor
வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல்    ai மூலம் மறைந்த பாடகரின் குரலை மீண்டும் ஒலிக்க இருப்பதாக தகவல்
Advertisement

வேட்டையன் படத்தின் மனசிலாயோவில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் முதல் பாடல் செப்.9ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ள நிலையில், அந்த பாடலில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் கொண்டு வருகிறேன் அது யார் என்று கண்டுபிடிக்கும் படி வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுளள்து.

ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. வேட்டையன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி ரூ. 65 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகவும், ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.90 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் பாடலான மனசிலாயோ என்ற பாடல் வரும் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படக்குழு சற்று முன் பாடலின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், மனசிலாயோவில் ஒரு பழம்பெரும் பாடகரின் குரலை மீண்டும் ஒலிக்கிறது, அது யார் என்று கண்டுபிடிகள் என்று பதிவிட்டுள்ளது. அந்த பாடலை கேட்ட பல ரசிகர்கள் எஸ்பிபி குரல் என பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருந்தார் ஏஆர் ரஹ்மான், அதே போல, கோட் படத்தில் வரும் 'சின்ன சின்ன கண்கள்' பாடலுக்காக பவதாரிணியின் குரல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் படத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது,வேட்டையன் படத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அல்லது  மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Tags :
Advertisement