மம்மூட்டியின் ‘களம் காவல்’ பட டிரெய்லர் வெளியீடு..!
மலையாளத்தில் உச்ச நட்சத்துரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் வசூர் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மம்மூட்டி களம்காவல் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில், ஜெய்லர் பட வில்லன் விநாயகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், களம் காவல் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
#Kalamkaval Official Trailer Out Now.
Watch Trailer: https://t.co/Cp0DGpVPq7 pic.twitter.com/MnCmZv1Etq
— Mammootty (@mammukka) November 13, 2025