For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்" - #MamataBanerjee அறிவிப்பு!

09:11 PM Sep 12, 2024 IST | Web Editor
 முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார்     mamatabanerjee அறிவிப்பு
Advertisement

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி, கொல்கத்தா நகரில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் பணிக்கு திரும்பவில்லை. மருத்துவர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. மருத்துவர்களை சமாதானம் செய்து பணிக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் : ஆடவர் #Longjump -ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் தங்கம் வென்று அசத்தல்!

மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், 15 பிரதிநிதிகளை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், போராடும் இளநிலை மருத்துவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திக்க 30 பேருடன் செல்வதாக அறிவித்தனர். முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, மேற்கு வங்காள ஜூனியர் மருத்துவர்கள் மன்ற நிர்வாகிகள் பேருந்து மூலம் தலைமைச் செயலகத்திற்கு விரைந்து சந்தித்தனர்.

இதைதொடர்ந்து, கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். பதவி குறித்து கவலைப்படவில்லை, எனக்கு நீதிதான் முக்கியம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement