Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”-  காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!

06:39 PM Jan 24, 2024 IST | Web Editor
Advertisement

மம்தா இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘I.N.D.I.A.’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்வதற்காக I.N.D.I.A. கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 13ம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது.  திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்தக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை இந்தியா கூட்டணியின் தலைவர் பொறுப்பை ஏற்க வலியுறுத்திய நிலையில், அவர் மறுத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகின. தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்ததுடன் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று நிதீஷ் குமார் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை. I.N.D.I.A. கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துத்தான் போட்டியிடுவோம். தனித்து போட்டியிட்டு பாஜகவை தோற்கடிப்போம். மேற்கு வங்கம் வழியாகத்தான் ராகுல் காந்தியின் இந்திய நீதி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவை தோற்கடிக்க எதையும் செய்வோம் என்று கூறியவர் மம்தா பானர்ஜி. மம்தாவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணிக்கு வலுவான தூண்கள் என்று ராகுல் காந்தி தெளிவாக தெரிவித்து இருந்தார். மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. இந்திய கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரையும் 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் சேரும்படி காங்கிரஸ் தலைவர் பலமுறை தெரிவித்து இருந்தார்" என கூறினார்.

Tags :
#ArvindKejriwal#MallikarjunKhargeALLIANCECongressCongress General SecretaryDelhiDMKIndiaINDIAPartiesINDIAvsNDAjairam rameshKejriwalMamata banerjeeMKStalinNitishKumarOppositionMeeting
Advertisement
Next Article