Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாஜ்மஹாலில் மாலத்தீவு அதிபர் #MohamedMuiuzzu!

02:55 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது மனைவியுடன் இன்று தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார்.

Advertisement

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் (அக்.6) இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வரவேற்றார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் நேற்று காலை (அக்.7) மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் முகமது மூயிஸை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மாலத்தீவு - இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த சூழலில், 3-ம் நாளான இன்று (அக்.8) முகமது முய்சு தனது மனையியுடன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து, இருவரும் காரில் தாஜ் மஹாலுக்கு சென்றடைந்தனர். அங்கு முகமது முய்சு மற்றும் அவரது மனைவி இருவரும் தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்தனர். தொடர்ந்து, அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிபா் முகமது முய்சு பங்கேற்க உள்ளார்.

Tags :
agraDelhiMohamed MuiuzzuNews7TamilTaj Mahaluttar pradesh
Advertisement
Next Article