தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் மலையாள நடிகை!
'7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் மூலம் பிரபல மலையான நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் மீண்டும் ரீ என்ட்டி கொடுக்கிறார்.
2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் '7ஜி ரெயின்போ காலனி'. இதில் ரவி கிருஷ்ணா உடன் சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி,மனோரமா என பலர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, ஆங்கில புத்தாண்டையொட்டி '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதல் பாகத்தை தயாரித்த ஸ்ரீ சூர்யா மூவிஸ் தான் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறார் அனஸ்வரா ராஜன். இவர் 2015 ஆம் ஆண்டு குரும்படத்தில் குழந்தை நட்சத்திராமாகவும் 2017 ஆம் ஆண்டு வெள்ளித்திரையிலும் அறிமுகம் ஆனார். பின்னர், 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் கடந்த 2022-ம் ஆண்டு திரிஷா நடிப்பில் வெளியான 'ராங்கி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியான் 2' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். 14 படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள அனஸ்வரா ராஜன் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.