For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RIP | மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்!

09:56 PM Sep 20, 2024 IST | Web Editor
 rip   மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்
Advertisement

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்.

Advertisement

மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (79). இவருக்கு பிந்து என்கிற மகள் உள்ளார். கவியூர் பொன்னம்மா 700க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, பிரபல நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, பிரேம் நசீர் உள்ளிட்ட நடிகர்களுக்கு இவர் அம்மாவாக நடித்துள்ளார். இவர் 4 முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்த சூழிலில், இவர் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மலையாள நடிகர் பிருத்விராஜ், பொன்னம்மாவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

Tags :
Advertisement