For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மால டம் டம்... மஞ்சர டம் டம்... - 2023-ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்..!

03:49 PM Dec 31, 2023 IST | Jeni
மால டம் டம்    மஞ்சர டம் டம்      2023 ல் திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள்
Advertisement

இந்த ஆண்டு திருமணம் செய்து தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய தொகுப்பைக் காணலாம்.

Advertisement

2023 ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல முக்கிய நிகழ்வுகளை இந்த ஆண்டு மக்கள் சந்தித்துள்ளனர். அரசியல், சினிமா , பொருளாதாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த முக்கிய நிகழ்வுகள் இந்த ஆண்டு ஏராளமாக நடந்துள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

தெகிடி, சூது கவ்வும், ஓ மை கடவுளே, போர்தொழில் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்தார். இதனையடுத்து இவர்களுக்கு செப்டம்பர் 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா

விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் முன்னதாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் டிசம்பர் 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

அமலா பால் - ஜகத் தேசாய்

மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால். மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தொழிலதிபரான ஜகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், டிசம்பர் 10-ம் தேதி, சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா நாயர் - ரோகித் மேனன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான ‘கோ’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கார்த்திகா நாயர். நடிகை ராதாவின் மகளான இவர், ரோகித் மேனன் என்பவரை நவம்பர் 19-ம் தேதி கொச்சியில் கரம்பிடித்தார்.

Tags :
Advertisement