Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது Thug life படத்தின் Sigma Thug Rules அப்டேட்! -இணையத்தில் படு வைரல்!

10:17 AM May 08, 2024 IST | Web Editor
Advertisement

இன்று காலை 10 மணிக்கு Thug life படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.  

Advertisement

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 ஷூட்டிங் முடித்துவிட்டு தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்தார் கமல். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். 2022 நவம்பரில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. பின்னர் கடந்தாண்டு கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.

மேலும், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதையும் படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் தக் லைஃப் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்தப் படத்தில் இருந்து துல்கர் சல்மானும் ஜெயம் ரவியும் விலகிவிட்டதாக தகவல் வெளியானது. அது உண்மை தான் என தற்போது தெரிய வந்துள்ளது. அதேபோல், சிம்பு தக் லைஃப் டீமில் இணைந்துள்ளது பற்றியும் செய்திகள் வந்தன.

அதனை உறுதி செய்யும் விதமாக, டெல்லியில் நடைபெறும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமலுடன், சிம்பு இருக்கும் போட்டோ வைரலானது. முக்கியமாக இந்த போட்டோவில் கமல்ஹாசன் சத்யா பட லுக்கில் இருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் புதிய ப்ரோமோ இன்று காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

 

அதன்படி,  தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும்  இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் Thug life படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ப்ரோமோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
ar rahmanKamal haasanMani RatnamSilambarasan TRsimbuThug Life
Advertisement
Next Article