For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

Major League Soccer | 46வது கோப்பையை வென்று #Messi அசத்தல்!

06:43 PM Oct 03, 2024 IST | Web Editor
major league soccer   46வது கோப்பையை வென்று  messi அசத்தல்
Advertisement

இன்டர் மியாமி அணி, சப்போர்டர்ஸ் ஷீல்டு கோப்பையை வென்ற நிலையில், மெஸ்ஸி 46வது கோப்பையை வென்ற பெருமையை பெற்றுள்ளார்.

Advertisement

மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) தொடரில் மெஸ்ஸி இன்டர் மியாமி அணிக்காக விளையாடுகிறார். நேற்று நள்ளிரவு நடைபெற்ற இந்தப்போட்டியில் கொழும்புஸ் அணியும் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும் மோதிக்கொண்டன. இதில் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்தில் இன்டர் மியாமி அணி வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக ஆடும் ஒரு அணிக்கு புள்ளிகளின் அடிப்படையில் சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 68 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கும் இன்டர் மியாமி அணிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இன்டர் மியாமி அணி சப்போர்டர்ஸ் ஷீல்டு விருது பெறுவது இதுவே முதல்முறை.

மேலும், இது மெஸ்ஸியின் 46ஆவது கிளப் கோப்பையாகும். கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் இந்த அளவு கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை நவ, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement