தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கிய மஜக பேரிடர் மீட்புக்குழு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மீட்பு படையினருடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்தனர்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தே திகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள் : 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி - தொடரைக் கைப்பற்றி இந்தியா அசத்தல்..!
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இன்னமும் மீட்பு படகுகள் மூலம் மட்டுமே சென்று உதவும் சூழ்நிலையே உள்ளது. இந்நிலையில், மஜக பொதுச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அறிவுறுத்தலின் பேரில் மாநில செயலாளர் இப்ராஹிம் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அசன் அலி உள்ளிட்டோர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.
'Tamil nadu Fire and Rescue Service Commando 'மீட்பு படையினருடன் மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டனர். மீட்பு படகுகள் மூலம் மஜகவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று வினியோகித்தனர்.