For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பராமரிப்பு பணிகள் : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது!

09:36 PM May 27, 2024 IST | Web Editor
பராமரிப்பு பணிகள்   சென்னை கடற்கரை   செங்கல்பட்டு இடையே நாளை ரயில்கள் இந்த நேரத்தில் இயங்காது
Advertisement

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் செயல்படுகிற  8மின்சார இரயில் பாதியில் நிறுத்தபடும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

சென்னை மக்களின் பிரதான போக்குவரத்தாக மின்சார ரயில் இருந்து வருகிறது. சென்னை மன்னடி அருகே உள்ள கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து மாநகரின் பல்வேறு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், பெண்கள், முதியோர்கள், வியாபாரிகள் என பல லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். சென்னையின் முக்கிய போக்குவரத்தாக பார்க்கப்படும் இந்த மின்சார ரயில் சேவை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை கடற்கரை பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கபடகூடிய மின்சார இயில்கள் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.00மணி முதல் மாலை 03.00 மணி வரையிலும் சிங்கபெருமாள் கோவில் இரயில் நிலையம் வரை இயக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 11.00மணி முதல் மின்சார இரயில்கள் இயங்காது எனவும்,சென்னை கடற்கரை-செங்கல்பட்டு சந்திப்பு வரையிலான 8இரயில்களும் சிங்கபெருமாள்கோவில் வரையிலும் இயக்கபடும் என இரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement