பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு…#Ropecar சேவை 40 நாட்களுக்கு ரத்து!
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்றுமுதல்
40நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு
வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு மேலே செல்ல படிவழிப்பாதை, மின் இழுவை ரயில்
மற்றும் ரோப்கார் ஆகியவை உள்ளன. ரோப்கார் சேவையானது பராமரிப்பு பணிகளுக்காக
மாதத்திற்கு ஒரு நாளும், ஆண்டிற்கு ஒரு மாதமும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பழனிகோயில் ரோப்கார், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று (அக்-7ம் தேதி) முதல் நிறுத்தப்படுகிறது. இதன்படி இன்றுமுதல் 40நாட்களுக்கு சேவை
நிறுத்திவைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேள்கொள்ளப்பட உள்ளது. இதில் புதிய
கம்பிவடம், மேல் ரோப்கார் நிலையத்தில் சாப்ட்டுகள், மற்றும் ரோப்கார்
பெட்டிகளில் உள்ள பழுதுகள் நீக்கம் செய்யப்பட்டு புதிய கருவிகள் மாற்றம்
செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் :மாபெரும் வெற்றி பெற்ற #Maharaja | இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசளித்த படக்குழு!
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளித்த பிறகு ரோப்கார் மீண்டும் சேவை துவங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதுவரை பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.