Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரயில் பயணிகள் கவனத்திற்கு! மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்!

09:09 AM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் அவ்வழித் தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளை ரத்து செய்தும் மற்றும் ஒரு சில ரயில்களின் சேவைகளை மாற்றம் செய்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சேவை முழுமையாக ரத்து

மதுரை - இராமநாதபுரம் இடையே மதியம் 12.30 மணிக்கும் மற்றும் இராமநாதபுரம் - மதுரை இடையே காலை 11 மணிக்கும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவை பகுதியாக ரத்து

1. மங்களூரு சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே அதிகாலை 5.05 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

2. கன்னியாகுமரி - மங்களூரு சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 6,9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு இயக்கப்படும்.

3. மதுரை - புனலூர் இடையே இரவு 11.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,8 ஆகிய நாட்களில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்.

4. புனலூர் - மதுரை இடையே மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 6,9 ஆகிய நாட்களில் புனலூரில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.

ரயில் சேவையில் மாற்றம்

1. குருவாயூர் - சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 4,5,8,10 ஆகிய நாட்களில் மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக மானாமதுரை,காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னை எழும்பூர் செல்லும்.

2. சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையே காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று திண்டுக்கல், சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக குருவாயூர் செல்லும்.

3. மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே மதியம் 12 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று திண்டுக்கல்,சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை , காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும்.

4. திருச்சி - காரைக்குடி இடையே இயக்கப்படும் டெமு ரயிலானது, வருகிற ஆகஸ்ட் மாதத்தில் 4,11,18,25 நாட்களை தவிர்த்து பிற நாட்களில் காலை 10.15 மணிக்கு இயக்கப்படுவதற்கு பதிலாக மதியம் 2:30 மணிக்கு இயக்கப்படும்.

5. குருவாயூர் - சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது வருகிற ஆகஸ்ட் 16 முதல் 26 ஆம் தேதி வரை கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்.

6. சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது, வருகிற ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்.

7. கொச்சுவெலி - மங்களூரு இடையே இரவு 9.25 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது, வருகிற ஆகஸ்ட் 17,22,24 ஆகிய தேதிகளில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்”

என தெற்கு ரயில்வே மதுரை மற்றும் திருவனந்தபுரம் கோட்டங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
MaduraiSouthern Railwaysthiruvananthapuramtrain servicestrain transport
Advertisement
Next Article