சாலையில் உலா வந்த முதலை - எங்கு தெரியுமா?
மகாராஷ்டிராவில் சாலையில் உலா வந்த 8 அடி நீள முதலையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
மகாராஷ்ரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சிப்லுன் சாலையில் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சாதாரணமாக உலா வந்தது.
திடீரென முதலை, சாலையில் குறுக்கிட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவன் ஆற்றிலிருந்து இந்த முதலை வெளியே வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The Indian Marsh #Crocodile was seen roaming on the streets of #Chiplun in #Ratnagiri district in #Maharashtra #News #NewsUpdates #middaynews #mumbai #viralvideos pic.twitter.com/BKS4kzXisD
— Gujarati Midday (@middaygujarati) July 1, 2024