#AssemblyElections | மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் அறிவிப்பு!
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா சட்டபேரவை பதவிக்காலம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே சமயம் 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13-ம் தேதி 43 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரு மாநில தேர்தல் முடிவுகள் நவம்பர் 23-ம் தேதி வெளியாகும்.
மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற இடங்களும், ஜார்க்கண்டில் 81 சட்டமன்ற இடங்களும் உள்ளன. 2019-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 5 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.